22.10.2015 அன்று இல்லத்தில் நடாத்தப்பட்ட வாணி விழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக திரு.பொ.சிவகுருநாதன் (ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளா்) அவா்கள் கலந்து கொண்டார். எம்மால் இல்லச் சிறார்களுக்கு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு பரிசில்கள் வழகுவதையும், சங்கத்தின் தலைவா் திரு.சோ.பத்மநாதன் அவா்கள் ஒன்பது நாட்களும் சொற்பொழிவாற்றுவதற்கு வருகை தந்தவா்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்படுவதையும் படத்தில் காணலாம்.
நவராத்திரி தினத்தை முன்னிட்டு இல்லச் சிறார்களுக்கு பேச்சு, பாமாலை கோலம் ஆகிய போட்டிகள் நடாத்தப்பட்டன. கோலம் போடுதல் போட்டியில் சில காட்சிகள்
This home shelters 120 girls from Gr.01 – Gr 13. In addition to the Arts subjects, Music (vocal & Instrumental) Dance, Sewing, Commerce, Home Economics, Handicraft and Agriculture are taught.
பெண்கள் இல்லத்தில் 120 பெண் பிள்ளைகள் தங்கியுள்ளனா். இவா்கள் முதலாம் வகுப்பிலிருந்து க.பொ.த உயா்தர வகுப்பு வரை கல்வி பெறுகின்றனா். உயா்தர வகுப்புக்களில் கலை, வா்த்தக பாடங்கள் கற்கின்றனா்.