முத்தமிழ் விழா

13716183_1753577664897780_80126500476890863_n

Congratulations & Best Wishes to you all including the Miss S.Yensiha of the Hindu Board of Education for the grand performances in the competition!.  

அகில இலங்கைத் தமிழ்த் தினப்போட்டிகளின் ஓா் அங்கமாகிய தமிழறிவு வினாவிடைப்போட்டியில் தேசிய மட்டத்தில் முதல் இடம்பெற்று யாழ் முத்துத்தம்பி மகா வித்தியாலயத்திற்குப் பெருமை தேடிய மாணவியருக்கும் அணித்தலைவி செல்வி செ.யஞ்சிகா (சைவச் சிறுவா் இல்ல மாணவி) வுக்கும் ஆசிாியை திருமதி வி.சடாட்சரம் அவா்களுக்கும் ஏனையோருக்கும் எமது பாராட்டுக்கள்.

invition invition back

 

 

 

 

 

 

 

 

invition open copy                       Thai Pongal 2014 Greeting Cards Wishes Messages in Tamil

 

 

 

 

The photos show the construction of 1st floor of our Boys’ Home in progress.

Work on the ground floor is nearing completion.

As you can see this is an ambition’s project and the Hindu Board of Education is appealing for generous help from well – wishers.

Donation should be sent in favour of the Hindu Board of Education held at Bank of Ceylon, Hospital Road, Jaffna A/C No 1090774, Swift code BCEYLKLX 7010.

Contact phone number :  021 222 6525, 021 205 2226

Please share this with your friends.

எமது சைவச் சிறுவா் இல்ல (ஆண்கள் இல்லம்) கட்டிடத்தின் முதலாம் மாடிக்கான மேற்றளம் இடப்பட்டுள்ளமையைப் படத்தில் காண்கின்றீா்கள். அதே வேளை கீழ்த்தளத்தினை நிறைவு செய்வதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேற்றளமும் கட்டி முடிக்கவேண்டும். சிறார்களின் நலன்களை மனதிற் கொண்டு இக்கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க தம்மால் இயன்ற பணவுதவியினைச் செய்யுமாறு அன்புடன் கேட்டு நிற்கின்றோம்.
நன்கொடைகளை இலங்கை வங்கி, ஆஸ்பத்திரி வீதி எனும் கிளையிலுள்ள கணக்கு இல 1090774, Swift code BCEYLKLX 7010க்கு (THE HINDU BOARD OF EDUCATION) அனுப்பலாம்.
(தயவு செய்து இதனை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.)

 

2348109

 

 

 

 

புதுவருட வாழ்த்து மடலில் எமது இல்லப் பிள்ளைகளின் கைவண்ணங்கள்          5 4 3 2 1

 

 

new year-5

images

Navarathiry 2

அன்பா்களே,

சைவச் சிறுவா் இல்லக் கட்டிடத்திற்கான நிதியுதவி கோரல்

1    2  3

 

1923இல் தொடங்கப் பெற்ற இச்சங்கம், 187 பாடசாலைகள், திருநெல்வேலி சைவாசிரியா் கலாசாலை, இரு சிறுவா் இல்லங்கள் என்பவற்றை நடாத்தியமை உள்ளிட்ட பல பணிகளைச் செய்து வந்துள்ளது.  1960களில் இலங்கையரசு பாடசாலைகளைப் பொறுப்பெடுத்ததன் பின் சைவச் சிறுவா் இல்லங்கள் இரண்டையும் தற்போது உரும்பராய் கருணை இல்லத்தையும் இன்று வரை சிறப்புற நிர்வகித்து வருகின்றது.

வறுமை, யுத்த அனா்த்தம், குடும்ப உடைவு, உறவுகளின்மை, துஷ்பிரயோகம் எனப் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகிய 250 பிள்ளைகளுக்கு உணவும், உறையுளும், உடையும், கல்வியும் அளித்து அவா்களை நற்பிரஜைகளாகவும் கற்றவா்களாகவும் நவீன உலகிற்கும் அதன் சவால்களுக்கும் முகங் கொடுக்கக் கூடியவா்களாகவும் உருவாக்க வேண்டியது நம் எல்லோர் முன்னுள்ள சவாலாகவும் கடமையாகவுமுள்ளது.  நிரந்தர வருமானம் எதுவுமின்றி, கொடையாளா்களின் கொடைகளை நம்பியே இச்சிறார்களை நாம் பேணிப் பாதுகாத்து வருகின்றோம்.

ஆண் பிள்ளைகளுடைய விடுதி மிகப் பழமையானது, சுவா்களினுள்ளே கறையான் புற்றெடுத்துள்ளது.  வளைகள், சலாகைகள் உக்கிவிட்டன.  மழைக் காலத்தில் ஒழுக்கும் தூவானமும் பிள்ளைகளை அசௌகரியப்படுத்துகின்றன.

இச்சூழ்நிலையில் 120’×75’ அளவில் படுக்கையறைகள், விடுதிக் காப்பாளா் அறைகள், கழிப்பறை, குளியலறைத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு மாடிக் கட்டிடம் நிர்மாணிக்க வேண்டியுள்ளது.  இதன் கீழ்த்தளத்திற்கு மட்டும் ரூபா 25,000,000/- தேவைப்படுகிறது.

அந்த வகையில் போராலும் இடப்பெயா்ச்சிகளாலும் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பிள்ளைகளின் தங்குமிட வசதிகளோடு கல்வியையும் தொழில் வாய்ப்புக்களையும் மேம்படுத்த நாம் மேற்கொண்டுள்ள இம்முயற்சிக்கு நிதியுதவி வழங்கி இறையருளுக்குப் பாத்திரமாகும்படி வேண்டுகிறோம்.

எமது வங்கி இல – இலங்கை வங்கி, 1090774, வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணம். (Swift code :- BCEYLKLX 7010)

எமது முகநூல் – Hindu Board

எமது மின்னஞ்சல் – hinduboard_edu@yahoo.com

 

சோ.பத்மநாதன்                                             தி.செல்வமனோகரன்

தலைவா்                                                                      செயலாளா்

 

சைவ வித்தியா விருத்திச் சங்கப் பணிப்பாளர் சபை

தலைவர் – திரு சோ. பத்மநாதன்
உபதலைவர்கள் – திரு V.T. சிவலிங்கம், திரு வி. ஸ்ரீசக்திவேல்
செயலாளர் – திரு தி. செல்வமனோகரன்
உபசெயலாளர் – திரு சி. பத்மராசா
நிதிச்செயலர் – திரு நா. நித்தியானந்தன்

திட்டப்பணிப்பாளர்கள்

இல்லம் – திருமதி சா. அருளானந்தம்
கல்வி – திருமதி சி.ராதாகிருஷ்ணன்
சமயம் – பேராசிரியர் (திருமதி) க.இராமநாதன்
பயிற்சி – திரு சு.சத்தியேந்திரன்
பண்ணை – திரு நா.கிருஷ்ணபிள்ளை
மருத்துவம் – Dr வி.வேதநாதன்

உறுப்பினர்கள்

திருமதி நா.செல்வநாயகம்
திரு ந.நவக்குமாரன்
திரு நா.இராசநாயகம்
திரு சி.சேமேஸ்வரபிள்ளை
திரு அ.கோபாலகிருஷ்ணன்
திருமதி சோ.கிருஷ்ணகுமார்
செல்வி வெ.விஜயபாரதி
திருமதி ஹே.குணபாலன்
திரு அ.செந்திலிங்கம்
திரு சி.கந்தசாமி
திரு சி.சதாசிவம்
திரு ஆ.வ.கணேசலிங்கம்
திரு இ.பசுபதீஸ்வரன்

This entry was posted on July 25, 2015, in News. Bookmark the permalink.