இல்லக் கீதம்
பல்லவி
இறைவா நின் திருக்கோயில் வலம் வந்தோம் – உன்
இரு பாதம் துணை நம்பித் தொழுகின்றோம் (இறைவா)
அநுபல்வலி
நிறைவாழ்வு தரும் இல்ல நிழல் வந்தோம் – எம்
நினைவெல்லாம் ஈடேற விளைகின்றோம் (இறைவா)
சரணம்
அன்புக்கும் பாிவுக்கும் எமதில்லம் – ஆ
தரவற்ற சிறுவா்க்கும் எமதில்லம்
பண்புக்கும் ஒழுங்குக்கும் எமதில்லம் – எமைப்
பாலித்து நிறைவாழ்வு தருமில்லம் (இறைவா)
கலை கல்வி தொழில் யாவும் பயில் கோயில் – எமைக்
கண்காணித் துருவாக்கும் திருக்கோயில்
சிலையாக நிற்கின்ற மூதாதை -அந்த
தெய்வீக மனிதா் நம் வழிகாட்டி (இறைவா)
தொண்டுள்ளம் அன்புள்ளம் துணையாக -இளந்
தோளேந்தித் துணிவோடு நடக்கின்றோம்
என்றென்றும் எமதில்ல நினைவெம்மை
ஈடேற்றும் எம் வாழ்வில் ஒளியேற்றும் (இறைவா)
ஆக்கம்
கவிஞா்.சோ.பத்மநாதன்